என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பினராய் விஜயன்"
சென்னை:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
முதல்-அமைச்சர் பினராயி விஜயன் இந்துக்களை மதிக்கவில்லை என பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சனம் செய்தார். தமிழகத்திலும் பா.ஜனதா மற்றும் சில இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை குறைகூற கூடாது என கூறி இருந்தார். இதை பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவரது பதிவில், “சபரி மலையை பொறுத்தவரை கேரள அரசை குறை சொல்லக் கூடாதாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். அப்படியானால் 2017-ல் பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே”.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #hraja #kamal #makkalneethimaiyam #sabarimala
இங்கிலாந்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய அணி கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.
இதற்காக விராட் கோலிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். ‘‘கேரள மாநில மக்களுக்கு கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பித்ததற்கு நன்றி. இந்திய அணியின் வெற்றிக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதும், ‘‘இந்த டெஸ்ட் வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு தற்போது கடினமான நேரம்’’ என்று கூறினார்.
இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்டில் கிடைக்கும் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முதல்-மந்திரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் இருந்து வருகிறார்.
இவர் கடந்த 1997-ம் ஆண்டு கேரள மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்த போது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 3 நீர்மின் திட்டங்களை செயல்படுத்த ‘எஸ்.என்.சி. - லாவலின்’ என்ற கனடா நாட்டு நிறுவனத்துடன் கேரள அரசு ஒரு ஒப்பந்தம் செய்தது.
இந்த திட்டத்தை செயல் படுத்த திட்ட விதிகளில் பினராயி விஜயன் திருத்தம் செய்து அதற்கு அனுமதி அளித்தார் என்றும் இதன் மூலம் ரூ.86.25 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
மேலும் மின்சாரத்துறை முதன்மை செயலாளர் மோகனசந்திரன், உயர் அதிகாரிகள் பிரான் சிஸ், கஸ்தூரி ரெங்க அய்யர், ராஜசேகரன் நாயர், சிவதாணு ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக கேரள லஞ்ச ஓழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதன்பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த வருடம் 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து பினராயி விஜயனை கேரள ஐகோர்ட்டு விடுவித்தது.
இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் லாவ்லின் மின்திட்ட ஊழல் புகாரில் பினராயி விஜயனை கேரள ஐகோர்ட்டு விடுவித்தது தவறு. லாவ்லின் நிறுவனம் மின்திட்டத்திற்கு பொருட்களை வினியோகம் செய்யும் ஏஜென்சியாக இந்த திட்டத்தில் முதலில் இணைந்தது. ஒரு வருடத்தில் அந்த நிறுவனமே அனைத்து பொருட்களையும் வினியோகம் செய்யும் நிறுவனமாக மாறியது.
மேலும் லாவ்லின் நிறுவனத்தின் விருந்தினராக பினராயி விஜயன் வெளிநாடு சென்று வந்துள்ளார். எனவே இந்த மின்திட்டத்தில் ஊழல் நடந்து உள்ளது. இந்த வழக்கை பினராயி விஜயன் சந்திக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 12 பக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. லாவ்லின் மின் திட்ட ஊழல் தொடர்பாக பினராயி விஜயனுக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த மனுவால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற ஊரை சேர்ந்தவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன். இவர் இதே பகுதியில் நேற்று ஒரு போலீஸ் நிலையத்தை திறந்து வைக்க வந்தார்.
விழா முடிந்ததும் அங்குள்ள ஒரு பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது டி.ஜி.பி. தேபேஸ்குமார் பெகரா மற்றும் உயர் போலீசார் உடன் இருந்தனர். சிறிது நேரத்தில் கேரள முதல்-மந்திரி வேறு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் பினராய் விஜயன் ஒரு போலீஸ் நிலையத்தில் சாப்பிடுவதுபோலவும், அதனை உயர் போலீஸ் அதிகாரிகள் உன்னிப்பாக பார்ப்பதுபோலவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது உயர் போலீஸ் அதிகாரி மற்றும் முதல்-மந்திரிக்கு தெரியவந்ததும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பினராய் விஜயன் உத்தரவிட்டார். போலீசாரும் முதல்-மந்திரிக்கு மட்டுமல்ல தங்களுக்கும் ஏற்பட்ட அவமானம் என்று உடனடியாக களத்தில் இறங்கினர்.
சைபர் செல் உதவியுடன் உயர் போலீஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் முதல்-மந்திரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை தவறாக சித்தரித்த நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் முகமது, மணீஷ், சசித்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கூறும்போது எங்களுக்கு வந்த பதிவை நாங்கள் பரவ விட்டோம். இந்த படத்தை யார் மார்பிங் செய்தார்கள் என்று தங்களுக்கு தெரியாது என்று கூறினர். இதனையடுத்து முதல்-மந்திரியை தவறாக சித்தரித்து படம் தயாரித்த முக்கிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். #pinarayiVijayan
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
நிபா வைரஸ் நோய் பாதித்து நர்சு, ஆட்டோ டிரைவர் உள்பட 18 பேர் பலியானார்கள். இதனால் கேரளா முழுவதும் பெரும்பீதி ஏற்பட்டது.
நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்வதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் தெருக்களில் முக கவசம் அணிந்து நடமாடினர்.
நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. மேலும் மத்திய சுகாதார துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழுவும் கேரளா வந்து ஆய்வு நடத்தியது. நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 2400 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இதில் 2377 பேருக்கு நோய் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இதனை கேரள சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவது பற்றி சட்டசபையிலும் பிரச்சினை எழுப்பப்பட்டது. முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா முகத்திலும், கையிலும் கவசம் அணிந்து சட்டசபைக்கு வந்தார்.
இதற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், முதல் மந்திரி பினராய் விஜயனும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக பினராய்விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பேசியதாவது:-
இதற்காக கேரள சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
நிபா வைரஸ் குறித்து சமூக ஊடகங்கள் பொதுமக்களிடம் பீதி கிளப்புவதை கைவிட வேண்டும். நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதாரத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ்சென்னிதலா பேசும் போது, நிபா வைரசை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கூட்டணி முழு ஒத்துழைப்பு அளிக்கும், என்றார்.#Nipahvirus #PinarayiVijayan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்